திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தயவு செஞ்சு போதும் நிறுத்துங்க.. பாக்க முடியல!! 1000 எபிசோட் பிரபல ஹிட் சீரியலை நிறுத்த கெஞ்சும் ரசிகர்கள்!!
தற்போதைய காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல்களுக்கு அடிமையாக உள்ளனர். அதிலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.
அவ்வாறு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டான தொடர் யாரடி நீ மோகினி. இதில் ஹீரோவாக ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் இதில் வில்லியாக ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வில்லியான ஸ்வேதா இறந்துவிடுவது போன்று காண்பிக்கப்பட்டது. இந்த நிலையில் முக்கிய கதாபாத்திரமான அவர் இறந்துவிட்டதால் சீரியல் விரைவில் முடிவடைந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் அவர் மீண்டும் உயிருடன் வருவது போல தற்போது காண்பிக்கப்படுகிறது. மேலும் அந்த தொடரை ஒரு மணி நேரமாக நீட்டித்துள்ளனர். இதுகுறித்த ப்ரமோ மற்றும் வீடியோக்கள் வெளியான நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் லாஜிக்கே இல்லாமல் இருக்கிறதே, தயவுசெய்து கதையை மாற்றுங்க. இல்லையெனில் சீரியலை முடித்து விடுங்கள். பார்க்க முடியவில்லை என கமெண்டு செய்து வருகின்றனர்.