மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருட்டுத்தனமாக ஃபார்ஹானா திரைப்படத்தை பார்த்த ரசிகர்.. படத்தின் தயாரிப்பாளர் செய்த செயல்.?
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் கவனத்தை பெற்றிருக்கிறார். இவர் முதன்முதலில் 'ரம்மி' திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இதன்பின் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது 'பர்ஹானா' எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மான்ஸ்டர், ஒரு நாள் கூத்து போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான 'பர்ஹானா' திரைப்படத்தையும் இயக்கிருக்கிறார். இஸ்லாமிய மதவெறுப்பை தூண்டும் விதமாக இப்படம் அமைந்துள்ளதாக கருதி இஸ்லாமியர்கள் 'பர்ஹானா' திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
'பர்ஹானா' திரைப்படத்தில் இஸ்லாமிய பெண் தன் குழந்தைகளுக்காக இஸ்லாமிய நம்பிக்கைகளை கடந்து வேலைக்குச் சென்று அங்கு நடக்கும் சம்பவங்களை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டதை திரைப்படம் என்று கூறப்படுகிறது.
இது போன்ற நிலையில், இந்த திரைப்படத்தை திருட்டுதனமாக ஆன்லைனில் பார்த்த ரசிகர் ஒருவர் ஜித்தன் ரமேஷின் நடிப்பு திறமையை குறிப்பிட்டு பதிவு செய்திருக்கிறார். இதனை சுட்டிக்காட்டி மறு பதிவு செய்த இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, "திருட்டுதனமா பார்த்தாலும் பாராட்டணும்னு வந்து பதிவு போடுறீங்க பாருங்க, அந்த மனசு தான் கடவுள்" என்று நக்கலாக பதிவு செய்து இருக்கிறார்.