திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாவ்.. சூப்பர்! நடிகை பரினா வீட்டில் நடந்த கோலாகல கொண்டாட்டம்! யாரெல்லாம் வந்திருக்காங்க பாத்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் வில்லியாக, டாக்டர் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரினா ஆசாத். அவர் துவக்கத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சில தொடர்களிலும் நடித்துள்ளார். ஆனால் அவரை மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடையச் செய்தது பாரதிகண்ணம்மா தொடர்தான்.
இத்தொடரில் இவரது நடிப்பு பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. பரினா கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த அவர் பின்னர் கர்ப்பகால போட்டோ ஷூட் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வந்தார். இந்தநிலையில் அண்மையில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
அதனை மிகவும் மகிழ்ச்சியாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது பரினாவின் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவிற்கு நடிகர் ஆரி வருகை தந்துள்ளார். மேலும் பாரதி கண்ணம்மா உட்பட சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.