ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. என்னவொரு டெடிகேஷன்! குழந்தைக்கு பாலூட்டியபடியே பரினா செய்த காரியத்தை பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் பயங்கர வில்லியாக, டாக்டர் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்தவர் பரினா ஆசாத். துவக்கத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்த அவர் பின்னர் சில தொடர்களிலும் நடித்துள்ளார்.ஆனால் அவரை மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடையச் செய்தது பாரதிகண்ணம்மா தொடர்தான்.
இத்தொடரில் இவரது நடிப்பு பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. பரினா கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனாலும் அவர் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகாமல் தொடர்ந்து நடித்து வந்தார். இந்தநிலையில் அண்மையில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
அதனை மிகவும் மகிழ்ச்சியாக அவர் தெரிவித்திருந்தார். பின்னர் குழந்தை பிறந்து சில காலங்களிலேயே பரினா மீண்டும் பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் பரினா ஷூட்டிங் ஸ்பாட்டில் தன் பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டியபடியே மேக்கப் போட்டு கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலான நிலையில், அதனைக் கண்ட ரசிகர்கள் என்ன ஒரு டெடிகேஷன் என பாராட்டி வருகின்றனர்.