ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
என்ன குழந்தை பெற்றதும் இப்படி ஆகிட்டாங்களே! பாரதிகண்ணம்மா வில்லி இப்போ எப்படியிருக்கார் பார்த்தீங்களா!
விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் ஹீரோ பாரதியை ஒருதலையாக காதலித்து அவரை திருமணம் செய்ய பல வில்லத்தனங்களை செய்யும் வில்லியான டாக்டர் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஃபரீனா.
இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். மேலும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பரீனா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவர் அண்மையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருந்தார். மேலும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் அவர் தொடர்ந்து பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் ஃபரீனாவுக்கு அண்மையில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதனை மிகவும் மகிழ்ச்சியாக அவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது தனது புகைப்படங்கள் சிலவற்றை பரீனா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் குழந்தை பெற்ற பிறகு உங்களது முகம் மிகவும் டல்லாக உள்ளது என கமெணட் செய்து வருகின்றனர். பரீனா அந்த புகைப்படங்களை சில பொருள்களின் விளம்பரத்திற்காக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.