ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
வாவ்.. ரம்ஜான் ஸ்பெஷலா! செம கியூட்டாக வேற லெவலில் ஜொலிக்கிறீயேமா ஃபரினா! வைரலாகும் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடனும் , விறுவிறுப்பாகவும் சென்று மக்களை பெருமளவில் கவர்ந்து வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதில் ஹீரோவாக டாக்டர் பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் கதாநாயகியாக கண்ணம்மா ரோலில் வினுஷா தேவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இத்தொடரில் அனைவரையும் மிரள வைக்கும் கொடூர வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் டாக்டராக நடித்து வந்தவர் பரினா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
பரினா சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர். அவர் அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அவர் தற்போது ரம்ஜான் ஸ்பெஷலாக ஃபுல் மேக்கப்பில் செம க்யூட்டாக உடை அணிந்து போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.