ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
வாவ்..புது கெட்டப்பில் அசத்தும் பாத்திமா பாபு! செம கலர்புல்லா கூட யார்னு பார்த்தீங்களா! வேற லெவல்..
பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து தனது அழகிய தமிழ் உச்சரிப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் பாத்திமா பாபு. பின்னர் அவர் தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த கல்கி படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து அவர் தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் குணச்சித்திர மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி பல சீரியல்களிலும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெருமளவில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்துகொண்டு விரைவிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற டான்ஸ் ஷோ நடைபெறவுள்ளது. இதில் பாத்திமா பாபு மற்றும் மோகன் வைத்யா இருவரும் இணைந்து நடனமாடவுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மேக்கப் போட்டு பரதம் ஆடுவதற்கான கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்ளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.