திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிப்ரவரி 2 அன்று வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன?.. விபரம் இதோ.!
பிப்ரவரி 02ம் தேதி (Feb 2 Release Tamil Movies) திரைப்பட ரசிகர்களை மகிழ்விக்க பெரிய அளவிலான நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை எனினும், அவர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நடிகர்களின் படம் ரிலீஸ் ஆகிறது.
அந்த வகையில், நாளை (பிப்ரவரி 02, 2024) அன்று ரிலீசாகும் தமிழ் படங்களின் விபரம் குறித்து காணலாம்.
வடக்குப்பட்டி ராமசாமி: சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ் பாஸ்கர், மாறன், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், ரவி மரியா உட்பட பலரும் நடித்து உருவாகியுள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. கார்த்திக் யோகி இயக்கத்தில், சியான் ரோல்டன் இசையில் தயாராகியுள்ள படம், நாளை திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது.
டெவில்: மாதுரி பிலிம்ஸ் & எச் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் விதார்த் பூர்ணா, சுபஸ்ரீ, திருகுன் உட்பட பலர் நடிப்பில், மிஸ்கின் இசையில், ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டெவில். திகில், காதல் கதையம்சம் கொண்ட இப்படம் நாளை வெளியாகிறது.
மறக்குமா நெஞ்சம்: 90 கிட்ஸ்களின் வாழ்க்கையை மையப்படுத்தி யோகேந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் ரக்சன் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மறக்குமா நெஞ்சம். காதல், காமெடி என தயாராகியுள்ள இப்படமும் நாளை வெளியாகிறது.