மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மிக்ஜாம் புயலால்.. ஹரிஷ் கல்யாணுக்கு ஏற்ப்பட்ட சோதனை.! அடக்கடவுளே.!
இந்த வருடம் தமிழ் சினிமாவில் பல குறைந்த அளவிலான பட்ஜெட் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்திருக்கிறது. சித்தா, குட் நைட், டாடா போன்ற திரைப்படங்களே அதற்கு முக்கிய சாட்சியாக விளங்குகிறது. அந்த வகையில், தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் நேற்றைய தினம் வெளியான பார்க்கிங் திரைப்படமும் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறது.
ராம்குமார் பாலகிருஷ்ணன் என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில், ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து, இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் போன்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், சிறந்த விமர்சனங்களை பெற்று வரும் பார்க்கிங் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 45 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்தது. அடுத்தடுத்த நாட்களில் 60 லட்சம் மற்றும் ₹.65 லட்சம் வசூல் செய்த நிலையில் சென்னையில் ஏற்ப்பட்ட புயலின் காரணமாக அடுத்த நாட்களில் 20 லட்சம் வசூல் செய்யாமல் சரிவை சந்தித்தது. கூட இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.