மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேறப்போவது இவரா! செம ஷாக்கான ரசிகர்கள்!!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டு இருக்கிறது. நடிகர் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பமான ஒரு சில தினங்களிலேயே வித்தியாசமான டாஸ்க்குகளால் போட்டியாளர்களிடையே மோதல் ஏற்பட்டு வீடே ரணகளமாகி வருகிறது.
இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துகொண்ட ஜூலி, சினேகன், சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, அனிதா சம்பத், பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி , தாமரை, ஸ்ருதி, அபிநய் மற்றும் நிரூப் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற முதல் நாமினேஷனில் வனிதா, ஜூலி, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிநய், சுருதி, சினேகன், அனிதா, நிரூப் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக சுரேஷ் சக்கரவர்த்தி குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.