திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
படையப்பா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபலமா? என்ன இருந்தாலும் அவர் அளவிற்கு வருமா??
தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும் சில படங்கள் மட்டுமே எப்பொழுதும் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்து நிலைத்திருக்கும். அவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஏராளமான படங்கள் இன்றும் மக்களால் பேசப்படுகிறது. அத்தகைய படங்களில் ஒன்று தான் படையப்பா.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் திரைக்கதை, வசனம், ரஜினிகாந்தின் ஸ்டைல் என அனைத்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சித்தாரா என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அதிலும் வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் ரஜினிகாந்துக்கு இணையாக மிரட்டி இருந்தார். அவரது நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.
நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு திருப்புமுனையாக அமைந்த படையப்பா படத்தில் முதலில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சிம்ரன்தான் தேர்வு செய்யப்பட்டாராம். ஆனால் கால்ஷீட் கிடைக்காத நிலையில் அவர் அந்த படத்திலிருந்து விலகியதாகவும், அதன் பிறகே ரம்யாகிருஷ்ணன் நடித்ததாகவும் தகவல்கள் பரவி வருகிறது.