திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தென்னிந்திய சினிமாவில் முதல் முறையாக... கேரளாவில் சாதனை படைக்க இருக்கும் ஜெயிலர் திரைப்படம்.!
தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். சினிமா துறையில் இவர் அடைந்திருக்கும் உயரத்தை இன்று யாராலும் எட்ட முடியாது என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாகவும் வளம் வருபவர்.
இவரது வளர்ச்சியில் கடைசியாக வந்த இரண்டு திரைப்படங்களான அண்ணாத்த மற்றும் தர்பார் சிறிய சற்களை கொடுத்தது அதனைத் தொடர்ந்து மீண்டும் வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய முனைப்பில் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்தார் ரஜினிகாந்த். இந்தத் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தமன்னா, மலையாள சினிமாவின் பிரபலமான மோகன் லால், கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் பாலிவுட் பிரபல நடிகரான ஜாக்கி சரஃப் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
#Jailer - First South Indian movie to release HIGEST SCREENS in Kerala 🔥🔥👑
— Sathyan Ramasamy (@SathyanRamasamy) July 21, 2023
Just Rajini Things 🥱🥱
#Hukum #Thalaivar @rajinikanth #Kaavaalaa 🙂 pic.twitter.com/EcUSOeh5iV
படம் வெளியாவதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தென் இந்திய சினிமா படங்களிலேயே கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது ஜெய்லர் திரைப்படம். மோகன்லால் மற்றும் ரஜினிகாந்தின் இணைந்து நடித்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கு கேரளாவிலும் அதிக அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.