#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எல்லா சைடும் கோல் போடுறாரே..." இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக... ஹிஜாபுடன் நடித்த முதல் நடிகை... மாஸான எதிர்நீச்சல் தொடர்.!
சீரியல் வரலாற்றில் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் ஹிஜாப் அணிந்து நடித்து வரும் முஸ்லிம் பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் ஸீபா ஷெரின்.
சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். இந்த தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை தொடர்ந்து பார்க்கும் சீரியல் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கத்தில் உருவாகி வரும் எதிர்நீச்சல் தொடர் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங் முதலிடத்தில் இருந்து வருகிறது .
இந்தத் தொடரில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் திருச்செல்வம் நடித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக ஃபர்கானா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஷீபா ஷெரின். ஆடிஷனில் நன்றாக பெர்ஃபாம் பண்ணிய இவரை வைஷ்ணவி தான் இந்த தொடருக்கு ரெக்கமென்ட் செய்தாராம்.
தொடரில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவர் போட்ட முதல் கண்டிஷனே நான் ஹிஜாப்புடன் நடிக்க வேண்டும் என்பதுதான். அதற்கு ஏற்றார் போலவே அந்த கதாபாத்திரத்தையும் வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். இந்தத் தொடர் முழுவதும் ஹிஜாப் நடித்ததன் மூலம் தேசிய அளவிலும் சீரியல் வரலாற்றிலும் ஹிஜாப் அணிந்து நடித்த முஸ்லிம் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ஷீபா ஷெரின். இதற்காகவே இவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. மேலும் ஆங்கில நாளிதழிலும் இவரைப் பற்றிய கட்டுரை இடம் பெற்று இருக்கிறது.