மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வாரிசு" படத்திற்கு பாசிடிவ் ரிவ்யூக்கு.... ப்ளு சட்டை மாறனுக்கு, விஜய் கொடுத்த ரூ.1 கோடி... பரபரப்பு தகவல்...
யூடியூப்பில் படங்களுக்கு சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்கள் செய்து பேமஸ் ஆனவர் ப்ளூ சட்டை மாறன்.
பெரும்பாலும் நெகடிவ் விமர்சனங்களை கூறி சர்ச்சையில் சிக்கும் இவர், கடந்த 2021-ஆம் வருடம் ஆன்டி இண்டியன் என்கிற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
இதன் பிறகும் மற்ற படங்களை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். கடந்த வருடம் கவுதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல் போன்ற திரைப்படங்களை கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.
இதன் காரணமாக இயக்குனர் கவுதம் மேனனுக்கும் மாறனுக்கும் வார்த்தை மோதல்கள் ஏற்பட்டது. ஒரு பேட்டியில் ப்ளூ சட்டை மாறனை நேரில் பார்த்தால் வச்சு செய்யணும்னு தோணுது என கௌதம் மேனன் கூறி இருந்தார்.
இந்த நிலையில், பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் வாரிசு படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் செய்ய வேண்டும் என்று ப்ளூ சட்டைமாறனுக்கு, நடிகர் விஜய் ரூ.1 கோடி கொடுத்துள்ளார் என்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இதனை தனியார் ஊடகம் ஒன்று யூடியூப்பில் செய்தியாக வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் அதனை ப்ளூ சட்டை மாறனுக்கு ஷேர் செய்துள்ளனர். இதை பார்த்த ப்ளூ சட்டை மாறன் "அட டேய்" என தன் பங்குக்கு மீம் போட்டு கலாய்த்துள்ளார்.