மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஆயிரம் இருந்தாலும்.. ஜோதிகா மாறி வராது." ஓபனாக பேசிய கங்கணா ரணாவத்.!
சந்திரமுகி 2005 ஆம் வருடம் தமிழில் வெளியான திரைப்படமாகும். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு மற்றும் காமெடி நட்சத்திரமாக வடிவேலு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் கன்னடத்தில் வெளியான அபமித்ரா என்ற படத்தின் ரீமேக் ஆகும். வித்யாசாகர் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர். பி வாசு இயக்கிய சந்திரமுகி படம் அந்த காலக்கட்டத்தில் பெரிய வெற்றி படமாக இருந்தது.
சந்திரமுகியின் வெற்றியை தொடர்ந்து பி வாசு சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸும், ஹீரோயினாக கங்கனா ரனாவத்தும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். காமெடி நடிகர் வடிவேலு சந்திரமுகி 2வில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கிறார். சந்திரமுகி படத்தின் வெற்றியின் போது ஜோதிகாவை பிரபல தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தது. அந்த பேட்டியில் பிடித்த பாலிவுட் ஹீரோயின் யார் என்று கேட்ட போது கங்கனா ரனாவத் என்று ஜோதிகா பதில் அளித்து இருந்தார்.
இந்நிலையில் ஜோதிகா அளித்த பதிலை மேற்கோள்காட்டி, "சந்திரமுகியில் ஜோதிகா நடித்தது போல் யாராலும் நடிக்க முடியாது. சந்திரமுகி 2 வின் இறுதி கட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ஜோதிகாவின் நடிப்பு போல் நடிப்பது சாத்தியமற்றது. அவர் அளவிற்கு இல்லை என்றாலும் நடிக்க முயற்சி செய்வேன்." என்று கங்கனா ரனாவத் பெருந்தன்மையுடன் கூறியிருக்கிறார்.