#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சர்ச்சைக்குள்ளான கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம்! மோசமான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கவுதம் மேனன்!
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஒருபகுதியாக சமீபத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் ஒன்று தயாராகி வெளியானது. இதற்கு ரசிகர்கள் பலரிடம் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது
இந்த குறும்படத்தில் திருமணமாகி இருகுழந்தைகளுடன் இருக்கும் திரிஷாவிடம் சிம்பு செல்போனில் பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அதில் சிம்பு மற்றும் திரிஷா பேசிய வசனங்களை ரசிகர்கள் பலரும் மிக மோசமாக கலாய்த்து மீம்ஸ்களை வெளியிட்டனர். மோசமான விமர்சனங்களையும் முன்வைத்தனர்.மேலும் கள்ளக்காதலை ஊக்குவிப்பதுபோல் குறும்படத்தை எடுத்து இருப்பதாக இயக்குனர் கவுதம் மேனனுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைத்து இயக்குனர் கவுதம் மேனன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நீங்கள் உங்கள் முன்னாள் காதலியை அழைத்து பேசுங்கள் என்று கூறுவதற்காக நான் இந்த படத்தை எடுக்கவில்லை. கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாவது பாகத்தின் ஒரு காட்சி.
10 ஆண்டுகளுக்கு பிறகு ஊரடங்கில் கார்த்திக்கும்,ஜெஸ்ஸியும் போனில் எப்படி பேசுவார்கள் என்பதை காட்ட விரும்பினேன். அவ்வளவுதான்..மேலும் இதில் சிம்புவின் கதாபாத்திரம் நாயகியை ஆறுதலாக பார்ப்பதாக இருக்கும். கலவையான விமர்சனங்கள் குறித்து எனக்கு கவலை இல்லை என்று கூறியுள்ளார்