மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதெல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை! கச்சா பாதாம் பாடல் பாடியவருக்கு ரசிகர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
மேற்கு வங்காள மாநிலம் குரல்ஜூரி எனும் கிராமத்தை சேர்ந்த பூபன் பத்யாகர் என்பவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்று வருபவர். அவர் எப்பொழுதும் பாடல் பாடிக் கொண்டேதான் வேர்கடலை விற்பாராம். அவ்வாறு அவர் ஒருநாள் கச்சா பாதாம் என பாடிக்கொண்டே வேர்க்கடலை விற்றுள்ளார். அதனை அருகிலிருந்தவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிரவே அது பெருமளவில் வைரலானது.
அதனைத் தொடர்ந்து இந்த கச்சா பாதாம் பாடல் அவரது குரலிலேயே ஆல்பம் பாடலாக வெளியிடப்பட்ட நிலையில் அந்த பாடல் உலகம் முழுதும் செம ஹிட்டானது. அந்த பாடலுக்கு இந்தியளவில் பல பிரபலங்களும் ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டனர். மேலும் பூபன் பத்யாகருக்கு ஏராளமான ரசிகர்களும் உருவாகினர்.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பூபன் சென்றுள்ளார். அங்கு அவரது ரசிகர் ஒருவர் அவருக்கு ஐபோன் 13ஐ பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து பூபன், ரசிகர் எனக்கு ஐபோன் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.
என் வாழ்க்கையில் இப்படி நல்ல விஷயங்கள் நடக்கும் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.