மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்ணை ஆபாசமாக சித்தரித்து குக் வித் கோமாளி நடிகர் பெயரில் மோசடி.. அதிர்ச்சி சம்பவத்தின் பகீர் பின்னணி..!!
தமிழ் திரையரங்கில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தோன்றியவர் தர்ஷன். இவர் கனா, தும்பா போன்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில் நடிகர் தர்ஷனின் பெயரில் போலியான முகநூல் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு பெண்ணிடம் பேசி வந்துள்ளனர். அந்தப் பெண்ணும் தர்ஷன் தான் தன்னுடன் பேசுகிறார் என்று எண்ணியுள்ளார்.
இந்நிலையில் மர்ம நபர் ஆபாச புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டவே, பயந்துபோன பெண்மணி ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் இது குறித்து பெண்மணி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் போலியான முகநூல் கணக்கை உருவாக்கி மிரட்டலில் ஈடுபட்ட அலாவுதீன், வாகித் ஆகிய இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.