மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மெத்தையில் பாம்புகள் உல்லாசம்.. கவனிக்காமல் மணிக்கணக்கில் போனில் பேசிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!
உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் மெத்தையில் இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்திருப்பதை கவனிக்காமல் அதன் மேல் அமர்த்த பெண்ணை பாம்பு கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள ரியானவ் என்ற கிராமத்தை சேர்ந்த பெண் கீதா. இவரது கணவர் ஜெய்சிங் யாதவ் தாய்லாந்தில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் தினமும் மணிக்கணக்கில் செல்போனில் பேசுவது வழக்கம்.
இதேபோன்று சம்பவத்தன்று கீதா தனது கணவருடன் நீண்ட நேரமாக வீட்டின் வெளியே நின்றபடி போனில் பேசியுள்ளார். பின்னர் போனில் பேசியபடியே படுக்கையறைக்குள் கீதா வந்துள்ளார். அப்போது மெந்தையில் இரண்டு பாம்புகள் இனச்சேர்கையில் ஈடுபட்டுளன.
இதனை சற்றும் கவனிக்காத கீதா போனில் பேசியபடியே பாம்புகளின் மேல் அமர்ந்துள்ளார். உடனே ஒரு பாம்பு கீதாவை கடித்துவிட்டது. இதனால் அலறிய கீதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அனால் அங்கு சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபக உயிரிழந்துள்ளார்.
அதே சமயம் பாம்புகளை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த பாம்புகளை அடித்தே கொன்றுவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.