திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" பருத்தி வீரன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஞானவேல் ராஜா!
2007ல் அமீரின் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் "பருத்திவீரன்". இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி கதாநாயகனாக அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்திருந்தார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 16 ஆண்டுகளாக தனக்கு இருக்கும் பிரச்சனைகள் குறித்து இயக்குனர் அமீர் சமீபத்தில் கூறியிருந்தார். இதையடுத்து அமீரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த ஞானவேல்ராஜா, அமீர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இதையடுத்து அமீருக்கு ஆதரவாக பருத்திவீரன் படத்தில் தொடர்புடைய நடிகர்கள் பலரும் கருத்து கூறிய நிலையில், தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "16 ஆண்டுகளாக இந்தப் பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது.
என்றைக்குமே நான் அதைப் பற்றி பேசியதைல்லை. அமீர் அண்ணா என்று தான் நான் அவரை கூப்பிடுவேன். அவர் என் மீது வைத்த குற்றச்சாட்டுகள் என்னை காயப்படுத்தியது. அதற்கு பதிலளித்து நான் பேசிய சில வார்த்தைகள் அவரை காயப்படுத்தியிருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.