திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இறந்தபிறகும் GOAT படத்தில் நடித்துள்ள நடிகர் விஜயகாந்த்!! வெளியான மாஸ் தகவல்..
விஜய் நடித்துவரும் Goat படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
Goat திரைப்படம்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் திரைப்படம் GOAT. சைன்ஸ் பிக்சனை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிவருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு காதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.
Goat படத்தில் விஜயகாந்த்
விஜய் தனது அரசியல் வருகையை உறுதி செய்ததை அடுத்து, திரையில் வெளியாகும் அவரது முதல் படம் இது என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எருழுந்துள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்வகையில் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இவ்வளவு கோடியா? விஜய்யின் GOAT படத்தை அதற்குள் பலகோடி கொடுத்து வாங்கிய பிரபல நிறுவனம்..
ஆம், Goat படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக Goat திரைப்படத்தில் இப்படியொரு விஷயத்தை படக்குழு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரமித்துப்போன பிரேமலதா
2.30 நிமிடங்கள் ஓடும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சியில் AI மூலம் விஜயகாந்த் நடித்திருப்பதாகவும், இதற்கான முறையான அனுமதியை விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் படக்குழு பெற்றிருப்பதக்கவும் கூறப்படுகிறது. மேலும், இந்த காட்சி ஏற்கனவே படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளநிலையில், படக்குழுவினர் அந்த காட்சியை பிரேமலாதாவிடம் போட்டு காட்டியுள்ளனர். அதனை பார்த்த பிரேமலதா அசந்துபோய்விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தளபதி குரலில் விசில் போடு.! 24 மணி நேரத்தில் படைத்த பெரும் சாதனை.! கொண்டாடும் ரசிகர்கள்!!