#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்தவர் திடீர் தற்கொலை! இதுதான் காரணமா? ஷாக்கில் பொதுமக்கள்!!
தமிழகத்தில் ஹரி நாடாரை போலவே அகமதாபாத்தில் கைகளிலும், கழுத்திலும் பல கிலோ கணக்கான தங்க நகைகளை அணிந்து கொண்டு நடமாடும் நகைக்கடை மனிதராக திகழ்ந்து வந்தவர் குஞ்சால் பட்டேல். இவர் உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து வலம் வந்தே மக்கள் மத்தியில் பரிச்சயமானார்.
இவர் வாகன கடனை சரிவர கட்டாத வாகனங்களை பறிமுதல் செய்யும் தொழியில் அதிரடியாக ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் 2017ம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்துள்ளார்.
இந்த நிலையில் புகழ்மிக்க நபராக வலம்வந்த குஞ்சால் பட்டேல் அகமதாபாத் மாதேபுரா பகுதியிலுள்ள அவரது வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நிலையில் அங்கு விரைந்த போலீசார்கள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர விசாரணையில் ஈடுபட்டு, கடிதம் எதுவும் கிடைக்குமா என தேடிய நிலையில் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் முதல்கட்ட விசாரணையில், குஞ்சால் பட்டேலுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனால் மனவுளைச்சல் அடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனாலும் நடமாடும் நகைக்கடையாக, செம கெத்தாக வலம் வந்த குஞ்சால் பட்டேல் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.