மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் இணைந்த சிவகார்த்திகேயன்.. அசத்தல் அப்டேட்.!
கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் குட்நைட். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகர் என்பவர் இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தின் வெற்றியால் கவனிக்கப்படும் இயக்குனராக விநாயகர் சந்திரசேகர் உள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அவருடைய அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி இயக்குனர் விநாயகர் சந்திரசேகர், நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து கதை கூறியதாகவும், அந்தக் கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.