மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மிருணாள் தாகூருக்கு விரைவில் திருமணமா.. இணையத்தில் வெளியான செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
மாடல் அழகியாகவும், விளம்பர படங்களிலும் நடித்து பிரபலமானவர் மிருணாள் தாகூர். இவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'சீதாராமம்' எனும் காதல் திரைப்படத்தின் மூலம் இந்திய மக்களிடையே பிரபலமானார்.
தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருநது வருகிறார். தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
தற்போது தெலுங்கில் 'ஹாய் நானா' எனும் படத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் இவருக்கு பிரபல நடிகருடன் திருமணம் எனும் செய்தி இணையத்தில் வைரலாக பரவியது.
இது போன்ற நிலையில், இதற்கு பதில் அளித்த மிருணாள், "எந்த நடிகருடன் திருமணம் செய்ய போகிறேன் என்று கூறினால் நானும் தெரிந்து கொள்வேன். இந்த வதந்தி மிகவும் வேடிக்கையாக உள்ளது" என்று கூறியுள்ளார். இச்செய்தி இனியத்தில் வேகமாக பரவி வருகிறது.