மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"விவாகரத்து குறித்த வதந்திகள்.. முற்றுப்புள்ளி வைத்து பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராய்.!"
1994ம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். தொடர்ந்து 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய "இருவர்" படத்தில் திரைத்துறையில் அறிமுகமானார். இதையடுத்து 1998ம் ஆண்டு ஷங்கர் இயக்கிய "ஜீன்ஸ்" படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளார். நந்தினியாக இவர் நடித்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.
முன்னதாக 2007ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய்க்கு, ஆராத்யா என்று ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் , கருத்துவேறுபாடு காரணமாக ஐஸ்வர்யாவும், அபிஷேக் பச்சனும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின.
இதுவரை இதுகுறித்து எந்த விளக்கமும் இருவரும் அளிக்காத நிலையில், தற்போது அபிஷேக் பச்சனின் அக்கா மகன் அகஸ்தியா நந்தாவின் அறிமுகத் திரைப்படம் "தி ஆர்ச்சீஸ்" பட விழாவில் ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் கலந்துகொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.