53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
"விஜய் கூடலாம் நடிக்கவே முடியாது" பேட்டியில் புலம்பி தள்ளிய கௌதம் மேனன்..
கோலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை அளித்ததற்கு பின்பு தற்போது 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் த்ரிஷா நடிக்கும் 'லியோ' திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், எஸ் ஜே சூர்யா, மிஸ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி, பாபு ஆண்டனி, ஜார்ஜ் மரியான், மேத்யூ தாமஸ், மாயகிருஷ்ணன், வையாபுரி போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. லியோ திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடையும் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகப்படுத்தி வருகிறது.
இது போன்ற நிலையில், 'லியோ' திரைப்படத்தில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கும் கௌதம் மேனன் இப்படத்தை குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். விஜய் அளவிற்கு எல்லாம் நடிக்கவே முடியாது. அவருடன் நடிப்பதற்கு சவாலாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.