திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறிய கௌதம் கார்த்திக்.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வளர்ந்து வருபவர் கௌதம் கார்த்திக். இவர் தமிழில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பல ஹிட் ஆகி உள்ளன.
இவர் நடிப்பிற்கென்று அதிக ரசிகர் கூட்டங்கள் இருந்து வந்தாலும் தமிழ் சினிமாவில் இவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. மேலும் மலையாள நடிகை மஞ்சுமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்திற்கு பின்பு இருவரும் தொடர்ந்து நடித்து சினிமாவில் பிஸியாக இருந்து வருகின்றனர்.சமீபத்தில் சில நெட்டிசன்கள் மஞ்சுமா மோகனின் உடல் எடை குறித்து கேலி செய்து வந்தனர்.
ஆனால் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்கள் போக்கில் மகிழ்ச்சியாக இருந்து வந்தனர். இது போன்ற நிலையில் கவுதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சுமா மோகனனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது. இப்பதிவிற்கு ரசிகர்களும் வாழ்த்துக் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்