மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"லுங்கி டான்ஸால் தான் தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தது!" சர்ச்சையை கிளப்பிய கெளதம் மேனன்!
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி "பொல்லாதவன்" படத்தில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. வெற்றிமாறன் படத்தில் தான் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இந்தக் கூட்டணியில் வெளியான படம் "ஆடுகளம்".
கிராமத்தில் சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் டாப்ஸி ஹீரோயினாக நடித்திருந்தார். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்த இப்படத்திற்கு சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 6 பிரிவுகளில் 2011ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் கிடைத்தன.
இந்நிலையில் இயக்குனர்கள் கெளதம் மேனன் மற்றும் பரத் பாலா இருவரும் கலந்துரையாடலில் ஆடுகளம் படத்தில் தனுஷின் அபாரமான நடிப்பைப் பற்றி கூறியிருந்தனர். இவர்கள் இருவருமே தனுஷை இயக்கியுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் அவர்கள், "ஆடுகளம் படத்தில் வரும் 'ஒத்த சொல்லால' பாடலுக்கு தனுஷ் நடு ரோட்டில் லுங்கியை தூக்கி டான்ஸ் ஆடியது தான் தேசிய விருது கிடைத்ததற்கு காரணம். தனுஷைத் போல் அவ்வளவு சாதாரணமாக யாரும் நடு ரோட்டில் இப்படி ஆட மாட்டார்கள். இவர் தான் நிஜ பேர்பார்மர்" என்று கூறினார்.