மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சன்னி லியோனுக்கு பால் கோவா, தர்ஷாவுக்கு லட்டு... பிக்பாஸ் வீட்டில் இருந்து அவசரஅவசரமா ஜி.பி முத்து வெளியே வர இதுதான் காரணமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஜி.பி முத்து. அவர் சமூக வலைத்தளங்களில் டிக்டாக் மற்றும் யூடியூப் வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர். ஜி.பி முத்துவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் அவருக்கென பெரும் ஆர்மியும் உருவானது.
ஆனால் அவர் 2வது வாரத்திலேயே தனது குடும்பத்தின் நினைவாக உள்ளது என்றும், தனது மகனை பார்க்க வேண்டும் எனவும் கூறி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். ஆனாலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவருக்கு பட வாய்ப்புகளும் வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டுள்ளார்.
அங்கு அவர் நடிகை சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டியுள்ளார். மேலும் அவரும் பதிலுக்கு ஜிபி முத்துவிற்கு பால்கோவாவை ஊட்டிவிட்டுள்ளார். தொடர்ந்து ஜி பி முத்து, தர்ஷா குப்தாவிற்கு லட்டு ஊட்டிவிட்டுள்ளார் இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜி.பி முத்து வெளியே வர இதுதான் காரணமா? என கலாய்த்து வருகின்றனர்.