மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடஅட.. ஒரே ஜாக்பாட்தான்! சன்னி லியோனை தொடர்ந்து இவங்க படத்திலா! கலக்கும் ஜி.பி முத்து!!
டிக் டாக் செயலியில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ஜி.பி முத்து. பின் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு அவர் யூடியூபில் சேனல் தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவருக்கென லட்சக்கணக்கான பாலோவர்ஸ்கள் உள்ளனர்.
மேலும் இவரை குறித்த மீம்ஸ்களும், ட்ரோல்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். ஜி.பி முத்து தற்போது படங்களிலும் நடிக்கத் துவங்கியுள்ளார். இவர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகும் ‘ஓ மை கோஸ்ட் ‘ என்ற ஹாரர் படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ஜி.பி முத்து நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது அவர் அறிமுக இயக்குனர் கோவிந்தா வசந்த் இயக்கத்தில் உருவாகும் பம்பர் என்ற படத்தில் துப்பாக்கிபாண்டியன் எனும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஷிவானி நாராயணன் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் எட்டு தோட்டாக்கள், ஜிவி படங்கள் மூலம் பிரபலமான வெற்றி ஹீரோவாக நடிக்கிறாராம்.