மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னணி நடிகையை தென்னிந்திய சினிமாவை விட்டு ஓட வைத்த இயக்குனர்! நடந்தது என்ன?
தென்னிந்திய திரை உலகில் கொடி கட்டி பறந்த இலியானா திடீரென்று பாலிவுட் பக்கம் கிளம்பிவிட்டார். இதற்கு காரணம் ஒரு இயக்குனர் தான் என்று கூறியுள்ளார் இலியானா.
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா. பாலிவுட்டில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் இலியானா.
சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோற்றம் அளித்திருப்பர். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
தான் தென்னிந்திய சினிமாவை விட்டு விட்டு பாலிவுட் பக்கம் சென்றதைப் பற்றி மனம் திறந்துள்ளார் இலியானா, அதில் "அல்லு அர்ஜுனோடு ஜூலை என்னும் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பாலிவுட் படமான பார்பி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தெலுங்கில் எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது, ரசிகர்கள் என் மீது கொண்ட அன்பினாலும் பாலிவுட் பக்கம் செல்வதற்கு சற்று தயங்கினேன்.
ஆனால் ஜூலை படத்தின் இயக்குனர் திரிவிக்ரம் தான் இது மிகப்பெரிய வாய்ப்பு மிஸ் பண்ணி விடாதே என அறிவுரை கூறினார். அவரது அறிவுரையின் படியே பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியதாக இலியானா கூறியுள்ளார். தற்போது அவர் மீண்டும் "அமர் அக்பர் ஆன்டனி" என்னும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.