திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிறந்தது புதிய இசை வாரிசு; ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதியருக்கு பெண் குழந்தை!
நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜி.வி.பிராகஷிற்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
சிறு வயதில் இருந்தே இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஜி.வி.பிரகாஷ் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். இவரது படைப்பில் பல பாடல்கள் மிக பிரபலமடைந்துள்ளன.
இவர் புகழ்பெற்ற பிண்ணனி பாடகியான சைந்தவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சைந்தவி மயக்கம் என்ன படத்தில் பிறை தேடும்.. தெறி படத்தில் உன்னாலே.. அசுரன் படத்தில் எள்ளு வய பூக்களயே போன்ற பல பிரபலமான பாடல்களை பாடியுள்ளார்.
இசையால் பின்னிப்பிணைந்த இந்த குடும்பத்தில் தற்போது புதிய வாரிசு ஒன்று பிறந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதியருக்கு நேற்று அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.