மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓ!! ஜி.வி பிரகாஷ் தனது மனைவியை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்..
நடிகர் ஜி.வி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்த தகவல்தான் இன்று அனைத்து ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஜி.வி பிரகாஷ் - சைந்தவி ஜோடி
தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் ஜி.வி பிரகாஷ் - சைந்தவி ஜோடி. பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்து வந்த இவர்கள் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் அன்வி என்ற மகளும் உள்ளார்.
ஜி.வி பிரகாஷ் திரைப்பயணம்
முதலில் இசை அமைப்பாளராகா அறிமுகமாகி பின்னர் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார் ஜி.வி பிரகாஷ். த்ரிஷா இல்லனா நயன்தாரா, பேச்சிலர், அடியே என பல்வேறு வெற்றி படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ஜி.வி பிரகாஷ், அடுத்தது ரபேல் என்றால் படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: 11 வருட திருமண வாழ்க்கை.! மனைவியை பிரிந்துவிட்டாரா ஜிவி பிரகாஷ்?? அவரே உடைத்த உண்மை!!
மேலும் இசை அமைப்பாளராகவும் தொடர்ந்து பணியாற்றிவரும் ஜி.வி பிரகாஷ், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், வணங்கான், அமரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வீர தீர சூரன், வாடிவாசல் என பல முக்கியத் திரைப்படங்களுக்கும் இசை அமைத்துவருகிறார்.
ஜி.வி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து
இந்நிலையில் நடிகர் ஜி.வி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிந்து வாழ்வதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனை உறுதி செய்யும்வகையில், கணவன் மனைவி இருவரும் தாங்கள் விவாகரத்து செய்யப்போவதாக நேற்று சமூக வலைத்தளங்களில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
ஜி.வி பிரகாஷ் விவாகரத்திற்கான காரணம்
நடிப்பு, இசை என அடுத்தடுத்து பயங்கர பிஸியாக இருக்கும் ஜி.வி பிரகாஷ், தனது குடும்பத்தினை கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால், குடும்பத்தை ஜிவி பிரகாஷ் கவனிக்கவில்லை என்றும் அதனால் சைந்தவி அவரிடம் சண்டை போட்டதுதான் இவர்களது விவாகரத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மனைவி மேல் இவ்வுளவு பாசமா?.. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவகாரத்தால் வருத்தத்தில் நெட்டிசன்கள்.!