திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அனைத்து பெண் குழந்தைகளும் திரௌபதியாக வாழவேண்டும்! சமூகத்தை சீர்படுத்தும் படம் தான் திரௌபதி! ஹெச்.ராஜா!
கடந்த சில மாதங்களாகவே திரெளபதி என்ற பெயர் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்தநிலையில் சமீபத்தில் வெளியான ‘திரெளபதி’ பட டிரைலர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த திரெளபதி டிரைலருக்கு பல தரப்பில் இருந்து ஆதரவும் வந்தது. சமீபத்தில் அப்படத்தின் இயக்குநர் மோகன், படத்தை பார்த்துவிட்டு எதையும் பேசுங்கள், என்று கூறினார்.
இப்படம் வட மாவட்ட மக்களின் வாழ்க்கையை பற்றி பேசும் படமாகவும், அப்பா - மகள் பற்றி பேசும் படமாகவும் உருவாகியிருக்கிறது. இது குறித்து சமீபத்தில் பேசிய இப்படத்தின் இயக்குனர். இந்த படத்தினை திரையரங்குகளில் சென்று பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, டவுன்லோட் செய்தாவது பாருங்கள். இந்த படம் பார்ப்பதற்காகவே மட்டும் எடுத்த திரைப்படம் என தெரிவித்திருந்தார்.
நடிகர் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரெளபதி படத்தை வெளியிட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில் படத்தை விரைவில் வெளியிடுவதாகவும், 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட உள்ளதாகவும் இயக்குனர் மோகன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திரௌபதி படம் குறித்து எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் கூறுகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையும், வயது வந்த மகள்களும் சேர்ந்து பார்க்க வேண்டிய படம் தான் இந்த திரௌபதி. ஒவ்வொரு பெண்குழந்தைகளும் திரௌபதி போலவே வாழவேண்டும். மேலும் சமூகத்தை சீர்படுத்தும் படமாகவே இந்த திரௌபதி படம் அமைந்துள்ளது. நானும் இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றவன். தற்போது எனது இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமனாகி வளமாக வாழ்கின்றனர். அதுபோலவே அணைத்து பெண் குழந்தைகளும் நலமாக வாழவேண்டும் என தெரிவித்தார்.