மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நானும் என் அம்மாவும் இந்த விஷயத்திற்காக கதறி அழுதோம்" கண் கலங்கி பேட்டி அளித்த ஹன்சிகா..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகையாக இருந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வருகிறார்.
தமிழில் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். தமிழில் சமீபத்தில் இவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் மற்ற மொழி சினிமாக்களிலும், வெப் சீரியஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இது போன்ற நிலையில் ஹன்சிகா மோத்வானி 16 வயதில் ஹார்மோன் இன்ஜெக்ஷன் போட்டுக் கொண்டு தன் உடல் பாகங்களை பெரிதாக்கிக் கொண்டார் என்ற வதந்தி இணையத்தில் பரவியது. இதற்கு தற்போது ஹன்சிகா தனது பேட்டியில், "இந்த வதந்திக்காக நானும் என் அம்மாவும் கதறி அழுதோம். என் அம்மா அழுவதை பார்த்து என்னால் தாங்க முடியவில்லை. இப்படி பொய்களை பரப்புவது கேவலமான செயல்" என்று பேட்டி அளித்துள்ளார்.