மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இயக்குனருக்கு பரிசளித்த பார்க்கிங் பட ஹீரோ!" விழா மேடையில் ருசிகரம்!
2010ம் ஆண்டு "சிந்து சமவெளி" படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். இதையடுத்து அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் கடந்த 1ம் தேதி "பார்க்கிங்" படம் வெளியானது. ஒரு காம்பவுண்டில் வசிக்கும் இருவருக்கிடையே கார் பார்க்கிங் தொடர்பாக ஏற்படும் பிரச்சனையே இந்தப் படம்.
இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஹரிஷ் கல்யாண், "இப்படம் எனக்கு மிகவும் முக்கியமான படம். இவ்வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குனர், தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி.
உடன் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. இப்படத்தின் மூலம் எனக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன்" என்று கூறிய ஹரிஷ், விழா மேடையில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்கக் காப்பு அணிவித்தார்.