மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நல்ல மனசு சார் உங்களுக்கு! நடிகர் ஹரிஷ் கல்யாண் செய்துள்ள மகத்தான காரியம் - குவியும் வாழ்த்துக்கள்!
தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் நடிகர் ஹரிஷ் கல்யாண். பொறியாளன் என்ற திரைபடம்மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிய பிறகு தனது சக போட்டியாளர் ரைசாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடித்த தாராளபிரபு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படமும் ஹிட் அடித்தது. இப்படி தொடர்ந்து சினிமாவில் கலக்கிவரும் இவர் தற்போது சமூக சேவையிலும் இறங்கியுள்ளார்.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற நோய்யாளிகளுக்காக 3,70,000 ரூபாய் பண உதவி செய்துள்ளார் ஹரிஷ் கல்யாண். இதனை தனது சமூகவலைத்தள பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், "உதவியற்ற புற்றுநோயாளிளின் கடைசி தருணங்கள் வரை கவனித்து வரும் ஸ்ரீ மாதா புற்றுநோய் பராமரிப்பின் மையத்தை சேர்ந்த திருமதி விஜயஸ்ரீக்கு எனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும், மனிதகுலத்திற்கான அவர்களின் சேவைக்கு எனது தாழ்மையான பங்களிப்பு இங்கே" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்களின் சேவை குறித்த விழிப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் இதனை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளதாகவும் ஹரிஷ் கல்யாண் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். ஹரிஷ் கல்யாணின் இந்த உதவிக்கு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.