மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படுஜோராக நடந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமண வரவேற்பு விழா.! அட.. யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீங்களா.!
சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதனை தொடர்ந்தும் சில படங்களில் நடித்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பெருமையால் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தது. அவர் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவரது நடிப்பில் தற்போது டீசல் என்ற படம் உருவாகியுள்ளது. அதன் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாண்க்கு நர்மதா என்ற பெண்ணுடன் கடந்த 28ஆம் தேதி சென்னை ஜிபிஎன் பேலஸில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருமண வரவேற்பு விழாவும் படுஜோராக நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் பிந்து மாதவி, லாஸ்லியா, ரைசா, கவின், ஆரவ், கணேஷ் வெங்கட்ராமன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.