மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாண்க்கு கல்யாணம்ங்க.! அதுவும் எப்போ? எங்கே தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இவர் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தின் மூலம் அவர் பெருமளவில் பிரபலமடையவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹரிஷ் கல்யாண்க்கு பட வாய்ப்புகள் குவிந்தது. தொடர்ந்து அவர் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள டீசல் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் கடந்த மாதம் நர்மதா என்ற பெண்ணுடன் நிச்சயம் நடைபெற்றதாக அறிவித்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், தனது திருமணம் பெற்றோர்கள் நிச்சயித்து தனக்கு பிடித்து நடப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது திருமணம் சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெற உள்ளது எனவும் தனக்கு அனைவரின் ஆசியும் வேண்டும். மேலும் தனது திருமணத்தில் கலந்து கொள்ளவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.