மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"காதல் இனி இல்லை ஒன்லி ஆக்சன் மட்டும்தான்" மனம் திறந்த ஹரிஷ் கல்யாண்..
2010ஆம் ஆண்டு வெளியான சர்ச்சைக்குரிய படமான "சிந்து சமவெளி"யில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து வெற்றிமாறனால் தயாரிக்கப்பட்ட "பொறியாளன்" படம் இவரது கவனத்தை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து வில் அம்பு என்ற படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண், 2017ம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜெர்சி, தனுசு ராசி நேயர்களே, தாராளப்பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது புதுமுக இயக்குனர் ராம்குமார் இயக்கியுள்ள "பார்க்கிங்" படத்தில் 30 வயது குடும்பத்தலைவனாக நடித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய இயக்குனர், "இது காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கதை. கார் வைத்திருக்கும் பலரும் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதை.
இதில் சில உண்மை சம்பவங்களும் அடங்கும்" என்று கூறினார். இதையடுத்து பேசிய ஹரிஷ் கல்யாண், " இந்தப் படத்தில் 30 வயது ஐடி நிறுவன ஊழியராக நடித்துள்ளேன். காதல் கதைகளைத் தவிர்த்து ஆக்சன் கதைகளுடன் தொடர்ந்து வருவேன்" என்று ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார்.