மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இவருடைய இயக்கத்தில் நடிக்கத் தான் ஆசை.. ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த டிசம்பர் 1ம் தேதி திரையரங்களில் வெளியான பார்க்கிங் திரைப்படம் ரசிகர்களையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார்.
மேலும், இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், இளவரசு, ராமா ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் திருச்சியில் உள்ள திரையரங்கு ஒன்றில் படத்தை பார்த்த ஹரிஷ் கல்யாண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இந்தப் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக சாதாரணமாக நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு தான் இந்த படம் என அவர் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும் பிக் பாஸ் குறித்த ஒரு சில கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.