மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை குளித்துக் கொண்டிருந்த போது, தாழ்ப்பாளை உடைத்த நடிகர்! சொன்ன ஷாக் காரணம்! பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிர்ச்சி!!
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழைப் போலவே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி என பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ஹிந்தியில் இதுவரை 14 சீசன்கள் முடிவடைந்து தற்போது 15 வது சீசன் அண்மையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் 15வது சீசன் சண்டை, சச்சரவு என மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.
கடந்த வாரம் போட்டியாளர்களுக்கிடையே நடைபெற்ற சண்டையில் அவர்கள் வீட்டிலிருந்த பொருட்களை நாசம் செய்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் டிவி நடிகையான விதி பாண்டியா குளித்து கொண்டிருக்கையில், சக போட்டியாளரான நடிகர் ப்ரதிக் செஹஜ்பல் பாத்ரூம் கதவின் தாழ்ப்பாளை உடைத்துள்ளார். இதற்கு நடிகை விதி பாண்டியா ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்று கேட்கையில், பிரதிக் மிகவும் கூலாக விளையாட்டாக செய்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில் வார இறுதியில் வருகை தந்த சல்மான், பிரதிக்கை அவர் செய்த காரியத்திற்காக கடுமையாக விளாசியுள்ளார். மேலும் உங்களது அம்மா அல்லது சகோதரியாக இருந்தாலும் இப்படித்தான் செய்வீர்களா என கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார். இச்சம்பவம் பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பையும், போட்டியாளர்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.