படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!



High court banned simbhu for acting

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவரது முழுப்பெயர் சிலம்பரசன். இவர் இயக்குனர் ராஜேந்தரின் மகன் ஆவார். சிம்பு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். பிறகு, ராஜேந்தர் இயக்கிய, 'காதல் அழிவதில்லை' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

simbu

இவர், ஏராளாமான விருதுகளை சிறந்த நடிப்புக்காகவும், நடனத்திற்காகவும், பாடகராகவும், இசைக்காகவும் பெற்றுள்ளார். இந்நிலையில், 'கொரோனா குமார்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டுவிட்டு நடிக்கவில்லை என்று வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் சிம்பு மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

simbu

இதை விசாரித்த உயர்நீதி மன்றம், "செப்டம்பர் 19க்குள் 1 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை சிம்பு செலுத்தவேண்டும். இல்லையென்றால் வேறு படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும்" என்று உத்தரவிட்டுள்ளது.