மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது நேர்ந்த சோகம்.! பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர்! சோகத்தில் திரையுலகம்!!
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது பிரபல இந்தி நடிகர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி தொலைக்காட்சியில் ஏராளமான தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சித்தாந்த் வீர் சூரியவன்சி. மாடலாக தனது கேரியரை துவங்கிய இவர் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மட்டுமின்றி படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவி அலீசியா. இவர் ரஷ்யாவை சேர்ந்த சூப்பர் மாடலாவார்.
இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். 46 வயது நிறைந்த சித்தாந்த் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக அவர் ஏராளமான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு கீழே விழுந்துள்ளார்.
இதனைக் கண்டு பதறிப்போன அங்கிருந்தவர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்ட போதிலும் அவர் எந்த பலனுமின்றி திடீரென உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.