#JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!
பணத்திற்காக ஆபாச பட கவர்ச்சி., நிர்வாண நடிப்பு.. பிரபல நடிகையை வறுத்தெடுத்த நீதிபதிகள்.. அதிரடி சம்பவம்.!
ஓடிடி தளத்தில் வெளியாகும் எந்த ஒரு வீடியோவிற்கும் சென்சார் இல்லாத காரணத்தால், பல கள்ளக்காதல் தொடர்பான ஆபாச ஷார்ட்பிலிம்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலமாகவே கள்ளக்காதல் தொடர்பான காட்சிகள் ஓடிடி தளங்களில் இந்தியாவின் பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன .
இந்த நிலையில் ஹிந்தி நடிகை ஏக்தா கபூரின் தயாரிப்பில், ராணுவ அதிகாரிகளின் மனைவிகள், பிற ஆண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வது போல வெப்சீரிஸ் கடந்த 2020ல் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ அதிகாரி ஷாம்புகுமார் என்பவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு நேரில் ஆஜராகாத நடிகை ஏக்தா கபூர் தனது வழக்கறிஞர் மூலமாக வாதாட வைத்திருந்தார்.
இறுதியாக வாதத்தின் போது ஆத்திரமடைந்த நீதிபதிகள், "நமது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பாக எந்த ஒரு பயமும் இல்லாமல் பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆபாசகாட்சிகளை படமாக எடுத்து வெப்சீரிஸ் என்ற பெயரில் வெளியிடுகிறீர்கள். நீங்கள் தீயவற்றை விதைத்து வருகின்றீர்கள்.
இதனை உங்களது கட்சிக்காரரான ஏக்தா கபூரிடம் தெரிவித்து, அவரது புத்திக்கு உரைக்கும் படி கூறுங்கள்" என்று கண்டித்து அனுப்பி, அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் ஹாலிவுட் திரையரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.