திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சத்தமே இல்லாமல் தனது மனைவியை 2-வது திருமணம் செய்த வில்லன் நடிகர்; குவியும் வாழ்த்துக்கள்.!
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த பிரபலமான நடிகர் ரோனித் ராய். இவர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இவர் தற்போது தனது 58 வயதில், தனது மனைவி ஜொன்னா நீலத்தை கோவாவில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டார். மனைவியை கரம்பிடித்து 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரை வில்லன் நடிகர் ரோனித் ராய் கரம்பிடித்துள்ளார்.
இதனால் புதுமண ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எளிய முறையில் நடந்த இந்த திருமணம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.