மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2.0 படத்தில் வில்லன் கதாபாத்திரை இழந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! யார் தெரியுமா?
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் மிக பிரமாண்டமாய் உருவாகியிருக்கும் 2.0 படம் நாளை வெளியாக உள்ளது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை அதிக பொருள் செலவில் தயாரித்துள்ளது. இதற்கு முன்னர் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவான எந்திரன் படம்தான் இதுவரை அதிக பொருள் செலவில் உருவான முதல் தமிழ் திரைப்படம். தற்போது 2.0 படம் அந்த சாதனையை முறியடித்துள்ளது.
இந்நிலையில் 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிக்கிறார். ஆனால் அக்ஷய் குமாருக்கு பதில் வில்லன் வேடத்தில் நடிக்க இருந்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். இதனை இயக்குனர் ஷங்கர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அர்னால்டை மனதில் வைத்துதான் வில்லன் கதாபாத்திரை உருவாக்கினாராம் படத்தின் இயக்குனர் ஷங்கர். மேலும் தயாரிப்பு நிறுவனமும் 2.0 படத்தில் அர்னால்டை நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளது. ஆனால் ஒருசில காரணங்களால் அர்னால்ட் இந்த படத்தில் நடிக்கமுடியால் போய்விட்டதாம்.
இதுபற்றி கூறிய இயக்குனர் ஷங்கர் அர்னால்டிற்காக நாங்கள் பட ஷூட்டிங்கிற்கான நேரங்களை ஒதுக்கினோம் ஆனால் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது, பின்னர் நடிகர் அக்ஷய்குமார் இந்த கதாபாத்திரத்திற்கு ஒத்துவருவார் என பலர் கூறினார். எனக்கும் அது சரியாக பட்டதால் நடிகர் அக்ஷய்குமாரை வில்லனாக நடிக்க வைத்தோம் என இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.