மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் ரஜினியின் உடல்நிலை குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!
நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது.மேலும் இதன் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் ஹைதராபாத் சென்றனர்.இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
மேலும் நடிகர் ரஜினி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் எப்போது வீடு திரும்புவார் என அனைவரும் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் இதுகுறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 25ஆம் தேதி உயர் ரத்த அழுத்தம் மற்றும் சோர்வால் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். அவரது ரத்த அழுத்தம் தற்போது சீராக உள்ளது. அவரது உடல் நிலை மிகவும் நன்றாகவுள்ளது. அவர் இன்று மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது.