மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. வேற லெவல்! ஷூட்டிங் ஸ்பாட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் செய்த காரியம்! பாராட்டி தள்ளும் நடிகைகள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர். அண்ணன் ,தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் குடும்ப தொடரான இதற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.
இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், ஹேமா பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த தொடர் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்து தொடரில் அண்ணியாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கு அண்ணனாக, மூர்த்தியின் மச்சானாக ஜெகா என்ற ரோலில் நடித்து வருபவர் டேவிட் சாலமன் ராஜா.
இவர் மகளிர் தினத்தன்று தன் கையால் உணவு சமைத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் நடிகைகளுக்கு உணவளித்துள்ளார்.இந்த வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் அந்த வீடியோ வைரலான நிலையில் அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. மேலும் அந்த உணவை சாப்பிட்ட நடிகைகளும் அவரை பாராட்டியுள்ளனர்.