திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"லோகேஷ்க்காக சாகவும் தயார்..." பிரபல பாலிவுட் இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து கைதி மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய மூன்று மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வளர்ந்து நிற்கிறார்.
தற்போது இவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் பான் இந்தியா சினிமாவாக உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன். மன்சூர் அலி கான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வருகின்ற அக்டோபர் மாதம் இன்று திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் லோக்கேஷன் அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் வரை போட்டி போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பாலிவுட்டின் பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப் லோகேஷ் கனகராஜை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெகுவாக பாராட்டி இருக்கிறார்.
#AnuragKashyap: "I want to die in LokeshKanagaraj's film😄💥"#LEO | #ThalapathyVijay pic.twitter.com/buOwLX3mZd
— AmuthaBharathi (@CinemaWithAB) July 4, 2023
அனுராக் காஷ்யப் "கேங்ஸ் ஆப் வசைப்பூர்" திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவையே தன்னை திரும்பி பார்க்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் நான் லோகேஷ் கனகராஜன் திரைப்படங்களில் சாகவும் தயார் என தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசுகையில் லோகேஷ் கனகராஜ் ஒரு மிகச் சிறந்த இயக்குனர். தனது திரைப்படங்களில் நடிகர்களுக்கு மேன்மையானதொரு மரணத்தை கொடுக்கிறார். அதனால் அவர் படங்களில் நான் சாகவும் தயாராக இருக்கிறேன் என்று பேட்டியளித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் அனுராக் காஷ்யப்.